என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவன் மனைவி கைது"
கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70). ஓய்வு பெற்ற நர்ஸ்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.
விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 17-ந்தேதி கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.
பின்னர் 18-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.
வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் சி.சி.டி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
போலீசார் அந்த கேமிராவை ஆய்வு செய்தபோது கொலை நடந்த அன்று இரவு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மொபட்டில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை போட்டோவாக பிரிண்ட் எடுத்து அந்த பகுதியில் உள்ள வீடு புரோக்கர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சூலூர் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ்(39), அவரது மனைவி காஞ்சனாதேவி(35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றனர். ஆனால் அவர்கள் கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இன்று சூலூர் வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனாதேவி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த கொலை குறித்து ரமேஷ் கூறியதாவது,
காஞ்சனாதேவி எனக்கு 2-வது மனைவி ஆவார். நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நர்ஸ் மேரி ஏஞ்சலின் வீட்டு அருகே வாடகைக்கு குடியிருந்தோம். அப்போது அவரது கணவர் விஜய் ஆனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியும். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து சூலூருக்கே வந்து விட்டோம். எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நர்ஸ் மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க திட்டமிட்டோம். அதன்படி நாங்கள் வீடு பார்ப்பது போல் சென்றோம். மேரி ஏஞ்சலின் மட்டும் வீட்டை காண்பிக்க எங்களுடன் வந்தார். அந்த நேரத்தில் நான் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு கீழே தள்ளிவிட்டேன். அப்போது மேரி ஏஞ்சலின் சத்தம் போட்டார்.
எனவே நாங்கள் மாட்டி கொள்வோம் என்பதால் கழுத்தை அறுத்து மேரி ஏஞ்சலினை கொன்றேன். பின்னர் நாங்கள் மொபட்டில் சென்று விட்டோம். போலீசார் எங்களை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பினோம். தற்போது போலீசார் பிடி விலகியதாக கருதி சூலூர் வந்தபோது சிக்கிக் கொண்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேரி ஏஞ்சலினை கொன்று கொள்ளையடித்த நகைகளை சூலூரில் ஒருவரிடம் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். அவர்களது மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் போலீசார் சாதுரியமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். #tamilnews
மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 18-ந்தேதி இவரது வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து பால்பண்ணை போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சர்மிளா வீட்டில் சுருட்டிய நகைகளை விற்பதற்காக கொள்ளை கும்பல், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தங்கமணி, அவரது மனைவி ராணி ஆகியோரிடம் கொடுத்து இருப்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான தங்கமணியும், அவரது மனைவி ராணியும் இதே போல் வேறு கொள்ளையர்களிடம் இருந்து நகைகளை வாங்கி விற்று கொடுத்தனரா? அவர்களுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சர்மிளாவின் திருடப்பட்ட கார் அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது.
போலீசார் நெருங்குவதை அறிந்த கொள்ளை கும்பல் திருடிய காரை விட்டுச் சென்று உள்ளனர். காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 26). சரக்கு வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினியும்(19) காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியுடன் திவாகரன் நெருங்கி பழகியுள்ளார்.
இதனால் சுபாஷினி கர்ப்பம் அடையவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவாகரனை வலியுறுத்தி உள்ளார். திருமணம் செய்ய மறுக்கவே பிரச்சினை வெடித்தது.
இது குறித்து சுபாஷினி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரனை சிறையில் அடைத்தனர்.
கர்ப்பமாக இருந்த சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த திவாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் சுபாஷினியுடன் நெருங்கி பழகினார். தான் செய்த தவறை திருத்தி கொள்வதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடந்த 5 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இருக்கன்குடி போலீசில் நிலையத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்த பின்னர் திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சுபாஷினியுடன் அடிக்கடி தகராறு செய்தார். இந்த நிலையில் நேற்று காலை குழந்தையின் கண், மூக்கில் மிளகாய் பொடி தூவப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தது.
தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திவாகரன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர் தான் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு திவாகரனை பிடித்தனர்.
இதை தொடர்ந்து திவாகரன், சுபாஷினி இருவரையும் போலீசில் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
இதில் சுபாஷினியே குழந்தையே கொலை செய்தது தெரியவந்தது. என் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை தனக்கு பிறக்கவில்லை. என கூறி பிரச்சினை செய்து வந்தார்.
குடும்பம் நடத்த குழந்தை தானே பிரச்சினை என கருதி குழந்தையை கொலை செய்தேன். இதற்கு உடந்தையாக கணவரும் இருந்ததாக சுபாஷினி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் கணவன்-மனைவியை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகை மாவட்டத்தில் மதுவிற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திட்டச்சேரி போலீஸ் சரகம் அண்ணா மண்டபம் அருகே தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் அருண்மொழித்தேவன் மெயின்ரோட்டை சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல் (வயது 35), அவரது மனைவி சித்ரா (34) ஆகியோர் புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய வடிவேல், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேரணாம்பட்டு ஏரிகுத்தி புதுமனை காலனியை சேர்ந்த மோகன் மகன் பாரதி (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர், அதே பகுதியில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தார். குடம் நிரம்பிய பிறகு சரியாக குழாயை மூடாமல் சென்று சென்றுள்ளார். இதனால் தண்ணீர் வீணாகியுள்ளது.
அப்போது, அங்கு வந்த ராஜூ என்பவரின் மனைவி சுதா, குழாயை சரியாக மூடி விட்டு செல்ல முடியாதா? என்று கேட்டு பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சுதாவும், அவரது கணவர் ராஜூவும் இளம்பெண் பாரதியை தாக்கினர்.
காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜூ (27) மற்றும் அவருடைய மனைவி சுதாவை (24) கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை, அருள் வேந்தன் நகரில் ஒரு வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அந்த வீட்டை கண்காணிக்க வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து டவுன் போலீஸ் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்.
அப்போது இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சந்தேகப்படும்படியாக பலர் சென்று வருவதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு 4 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அந்த 4 பெண்களும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கணவன்- மனைவியான முருகன்- யசோதா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை என்ன ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த விபசார கும்பலுக்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதும் இருக்குமா? என்றும் விசாரணை நடக்கிறது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங் கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் இன்ஸ் பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். இதில் பஸ்சில் பயணம் செய்த கம்பத்தை அடுத்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஐயன், அவரது மனைவி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அதே சோதனைச் சாவடியில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன் றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். டிரைவர் இல்லாமல் ஓடிய காரை பொன்னேரி கலால் போலீஸ் காரர் சந்திரசேகரன் நிறுத் தினார். அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பிடிபட்ட 2 பேரும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த சுரேஷ்பாபு, பாலச் சந்திரா என்பதும் ஆந்திரா வில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து கார், 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செம்மரக் கட்டை கிடைத்தது எப்படி? யாருக்கு கடத்தி செல்லப்படு கிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அதிகாரிகளின் அதிரடி சோதனையில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் அடுத் தடுத்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்